ராஜஸ்தான் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குள் குப்பைகள் கிடப்பது போன்ற போட்டோ ஒன்றை பயணி ஒருவர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ராஜஸ்தானி விரைவு பேருந்தின் பரிதாப நிலை” இன்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் அவர் ரயிலில் தரமற்ற உணவுகளை வழங்குவதாகவும் பாத்ரூம் மிகவும் மோசமான நிலைமையில் காணப்படுவதாகவும் அந்த பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன்பின் அவர் நான் ரயிலில் பயணம் செய்வதற்கு ரூபாய் 12000 கொடுத்ததாகவும் ரயில் பெட்டிகளுக்குள் சுத்தமில்லாமல் குப்பைகள் போடப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரயில் பெட்டிகளுக்குள் அனுமதி இன்றி சிலர் உள்ளே வந்து பிச்சை எடுப்பதாகவும் தேவையற்ற பொருட்களை விற்க வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் ரயில் சுகாதாரமற்று இருந்ததால் எனது மகனுக்கு தற்போது உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டதாகவும் இதை பிரதமர் மோடி அவர்கள் தயவுசெய்து சரி செய்யுமாறும் பதிவில் வெளியிட்டுள்ளார். இதற்கு தற்போது ரயில்வே அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்.அதில் அவர்கள் உங்களது புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

“>