
யூடியூபில் பைக் பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் டிடிஎப் வாசன். அதன் பிறகு அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் 10 வருடங்களுக்கு தடை செய்யப்பட்டது. இவர் இயக்குனர் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதற்கான போஸ்டர்கள் கூட வெளியான நிலையில் திடீரென இயக்குனர் படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்கிவிட்டதாக அறிவித்தார்.
அதன் பிறகு கடந்த மாதம் 15 ஆம் தேதி புதிய ஹீரோ யார் என்று அறிமுகப்படுத்துவதாக அவர் கூறியிருந்த நிலையில் பின்னர் சில காரணங்களால் அந்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை என்றார். இந்நிலையில் மஞ்சள் வீரன் நடிகர் கூல் சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இணையதளத்தில் அப்படி ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. மேலும் இதனால் டிடிஎஃப் வாசனுக்கு பதில் கூல் சுரேஷ் தான் மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.