யூடியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் தமிழ்நாடு போக்குவரத்து  ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.