
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் நடிகை நயன்தாரா மலையாள நடிகர் நிவின் பாலியுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு நயன்தாரா மற்றும் நிவின் பாலி இணைந்து லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து டியர் ஸ்டுடண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் இயக்குகிறார்கள். மேலும் இந்த படத்தின் டைட்டில் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Into the fun and gripping world of “Dear Students” joins, the incredible, ever radiant Nayanthara 💖💖https://t.co/A9iLfTbZKy#Nayanthara@GeorgePhilipRoy @Sandeepkumark1p @PaulyPictures#karmamediaent#shaaileshrsingh#ultrabollywood #nitink283#nayanthara #dearstudents pic.twitter.com/OjxAxogij6
— Nivin Pauly (@NivinOfficial) April 14, 2024