
கோவை மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் தான் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன். இவர் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் இவர் அதி வேகமான பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். இப்போது டி.டி.எப் வாசன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்க உள்ளார்.
அதன்படி, டைரக்டர் செல்அம் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு “மஞ்சள் வீரன்” என படக்குழுவினர் தலைப்பு வைத்திருக்கின்றனர். மேலும் டிடிஎப் வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போன்று இருக்கும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் “299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதோடு இந்த படத்தில் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.