நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான்  அணி 11.5 ஓவரில் வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்தார்.

அசத்தலாக பந்து வீசிய தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸி, யான்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு எளிதாக இலக்கை எட்டியது. இதன்மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணியில் ஹென்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். மேலும் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அந்த அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.