நடப்பு டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் சேர்த்தார். இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சற்று தடுமாறி விளையாடிய விராட் கோலி இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்த நிலையில் அந்த நம்பிக்கையை அவர் நிலைநிறுத்தி அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி 7  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் விராட் கோலி போட்டி முடிவடைந்த பிறகு இனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.