ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கிய நிலையில் ஜூன் 29-ல் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் சிறப்பாக விளையாடிய 5 பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் குறித்து பார்ப்போம்.

அதன்படி பேட்டிங்கை பொறுத்த வரையில் குர்பாஸ் மொத்தம் 281 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு 2-ம் இடத்தில் 257 ரன்கள் அடித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், 3-ம் இடத்தில் 255 ரன்கள் எடுத்து இடத்தில் 255 ரன்கள் எடுத்து டிராவிஸ் ஹெட்டும், 4-ம் இடத்தில் 243 ரன்கள் எடுத்து டி காக்கும், 5-ம் இடத்தில் 231 ரன்கள் எடுத்து இப்ராஹிம் சத்ரானும் இருக்கிறார்கள். மேலும் இதேபோன்று பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் எடுத்து  பசல்ஹாக் பரூக்கியும், 17 விக்கெட்டுகள் எடுத்து அர்ஷ்தீப் சிங்கும், 15 விக்கெட்டுகள் எடுத்து பும்ராவும்,  15 விக்கெட்டுகள் நோர்ஜேவும், 14 விக்கெட்டுகள் எடுத்து ரஷீத் கானும் இருக்கிறார்கள்.