டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் அமெரிக்க அணி முதல் 2 போட்டிகளில் கனடா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த நிலையில் 3-வது போட்டியில் இந்தியாவிடம் தோற்றது. இதனால் இந்த போட்டியில் அமெரிக்கா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் அமெரிக்கா தோல்வி அடைந்தால் டி20 போட்டியில் இருந்து வெளியேற வேண்டும். ஆனால் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சனையும் இன்றி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ஆனால் இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். இன்று நடைபெறும் போட்டியில் 85 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் பாதியில்  நிறுத்தப்பட்டால் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். இந்த போட்டியில் வருண பகவான் கருணை காட்டி போட்டி நடைபெற்று அமெரிக்கா தோல்வி அடைந்தால் மட்டும் தான் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் மாறாக அமெரிக்கா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மூட்டை கட்ட வேண்டியதுதான்.