டி10 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ‌ கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற 29 வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ளது. இதனால் தற்போது நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் பகுதியை இழந்து டி20 போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி போட்டியிலிருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரு போட்டிகளில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில் இந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் உகாண்டா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.