
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் பேட்ஸ்மேனாக இருப்பதால் பும்ரா ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் பல வருடங்களாக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் நடைபெறக்கூடிய டி20 உலகப் போட்டியில் எனக்கு மட்டும் இன்றி அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பும்ரா மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக இருப்பார் என்று கூறியுள்ளார்.