வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 303 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதா வங்காளதேச சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.