தமிழ் சினிமாவில் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சனம் செட்டி. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சனம் செட்டி தற்போது டெலிகிராமில் வந்த ஒரு மோசடி தொடர்பாக எச்சரிக்கை வீடியோ உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது  ஒரு டெலிகிராம்  நிறுவனத்திலிருந்து தொடர்பு கொண்டு தன்னிடம் மோசடி செய்ய முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்நிறுவனம் தன்னை தொடர்பு கொண்டு தனது தனிப்பட்ட தகவல்களை கேட்டதாகவும், பின்னர் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி பொதுமக்களை எச்சரித்துள்ளார். அவர் தனது வீடியோவில், “எந்த ஒரு அந்நியரையும் நம்பி உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்” என்றும், “எந்த ஒரு நிறுவனமும் உங்களிடம் பணம் செலுத்தும்படி கேட்டால் உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.