தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு கூட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று பிற்பகல் ஒரு மணி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.