நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியாவில் நவம்பர் 25ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தற்போது அறிவித்துள்ளனர். அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில் தங்களுடைய இரண்டாம் கட்ட போராட்டத்தை அவர்கள் டெல்லியில் தொடங்கிய நிலையில் அதனை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். அதாவது டெல்லி முற்றுகை போராட்டத்தை ஹரியானா  அரசு தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சம்புவில் போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் தற்போது குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.