
டெல்லி சாலையோர கடையில் ஜெர்மன் அதிபர் தேநீர் அருந்திய புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால் இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரியும் உயர்மட்ட வர்த்தக குழுவினரும் வந்திருந்தனர். மேலும் இவர்களுக்கு ராஜ்யபத் பவனில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருதரப்பு மண்டலம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி அதிபர் டெல்லியின் சாணக்யாபுரி பகுதியில் சாலையோர தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்ததாக ஜெர்மனி தூதரகம் செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.