
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் குபிபவ் மார், ஆம் ஆத்மி எம்.பி குப்தாவின் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பணப் பரிமாற்ற வழக்கில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடத்தி வருகிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை அனுப்பிய 5 சம்மன்களுக்கும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
#WATCH | ED raid underway at the residence of AAP MP ND Gupta in Delhi.
As per sources, ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal's personal secretary among others connected to the Aam Aadmi Party as part of its money… pic.twitter.com/dRdlSJjE6s
— ANI (@ANI) February 6, 2024