
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் அண்மையில் துவங்கப்பட்ட பிரிவில் சில வாகனங்கள் நுழைவதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) தடைசெய்துள்ளது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் புது பிரிவு 1-ல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள், 3 சக்கர வாகனங்கள், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் மற்றும் டிரெய்லர்கள் (அ) டிரெய்லர்கள் இல்லாத டிராக்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு நுழைவிற்கு தடைவிதித்துள்ளது.
முன்னதாக டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் முதல் முடிக்கப்பட்ட பகுதியான டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவினை கடந்த பிப்,.12 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் 246 கிலோ மீட்டர் டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவு ரூபாய்.12,150 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது.