
டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மூன்று பயணிகளிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை செய்ததில் அவர்களது பேண்ட் இடுப்பு பட்டை பகுதியில் மறைத்து தங்கம் கடத்தியது தெரிய வந்தது.
On the basis of profiling, Customs@IGI Airport have seized gold weighing 3735 grams valued at 1.99 Crores brought by three foreign nationals who arrived from Dubai. The passengers have been arrested under Customs Act, 1962. Further, investigations are underway. pic.twitter.com/CweCfwl2Tp
— Delhi Customs (Airport & General) (@AirportGenCus) November 22, 2023
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 3 கிலோவுக்கும் அதிகம் என்றும் இதன் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மூன்று நபரை கைது செய்ததோடு இது தொடர்பான காணொளியை டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் X வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.