வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டிகள் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 282 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் 87 ரன்கள் குவித்தார். இதனால் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜோ ரூட் 12027 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான ‌ பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது லாரா 11953 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்தார். மேலும் அவருடைய சாதனையை தற்போது ரூட் முறியடித்து ‌7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.