சென்னையில் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர். தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், டேட்டிங் செயலி மூலமாக பெண்களை அழைத்து வந்து, அவர்களுடன் நேரம் கழிப்பது அவரது பழக்கம். இந்த நிலையில் லோகேன்டா என்ற டேட்டிங் செயலியில் அவர், 25 வயது இளம்பெண் ஒருவரை தொடர்பு கொண்டு, அவரை மூன்று மணி நேரம் உல்லாசமாக இருக்க ரூ.6 ஆயிரம் பேரம் பேசி அழைத்துவந்தார். திட்டமிட்டபடி, அந்த இளம்பெண் குமாரின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்தார்.

பின்னர் அவருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, குமார் குளிக்கப் போனார்.ஆனால், குளித்து முடித்து திரும்பியபோது, அவரது பீரோ திறந்திருக்கும் நிலையை கண்டு குழம்பினார். பீரோவில் உள்ள துணிகள் கலைந்திருந்தன. அதில் வைத்திருந்த 34 கிராம் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. அவர் உடனடியாக அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். அந்த பெண் செயலி கணக்கை அழித்துவிட்டு மாயமாகிவிட்டார்.தொடர்ந்து, வேறு வழியின்றி குமார் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், குமாரின் வீட்டு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அந்த பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர். அவரை