உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது.

ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் உணவகத்திற்கு வந்த போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உணவகத்தில் பணியாற்றிய வினோத் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். அவரது மொபைல் போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.