
ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி, பில் சால்ட் களமிறங்கினார்கள், இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது.
CONFUSION BETWEEN YASH DAYAL AND JITESH SHARMA DROPPED SKY’S CATCH.
LOOK AT VIRAT KOHLI REACTION AT THE END😡🙃.#RCBvsMI #ipl #IPL2025 pic.twitter.com/8Kf0KDiScj— Aksh Chaudhary (@ChaudharyAkshS1) April 7, 2025
இதன் மூலமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது பன்னிரண்டாவது ஓவரில் சூரியகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றார்கள். அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே வீசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் .இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.