கேரள மாநிலம் பாலக்காட்டில் உருவாக்கப்பட்ட ‘டைனோமுக்கு’ என்ற கற்பனை கிராமத்தைப் பற்றிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1.25 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், டைனோசர்கள் பசுமை வயல்வெளிகளில் மெதுவாக நடந்து செல்லும் காட்சிகள், மனிதர்களுடன் இணக்கமாக வாழும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “மனிதர்களால் வளர்க்கப்பட்ட  உயிரினங்களில் டைனோசர்களும் இடம்பெற்றிருக்கும்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், ஒரு பெண் இளம் டைனோசருக்கு தீவனம் தயாரிப்பது, லுங்கி அணிந்த ஒரு நபர் டைனோசர் முட்டையைத் தலையில் சுமந்து செல்லும் காட்சிகள், டைனோசர் முட்டை விற்கும் கடை, குழந்தைகளுடன் விளையாடும் பேபி டைனோசர்கள் போன்றவை மிக அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் டைனோசர்களின் குரல், அசைவுகள் அனைத்தும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன.

இந்த வீடியோவை ‘ஸ்டோரிடெல்லர்ஸ் யூனியன்’ என்ற கிரியேட்டிவ் குழு உருவாக்கியுள்ளது. சினிமா, விளம்பரங்கள், இசை வீடியோக்கள் என பல தளங்களில் உருவாக்கங்களை செய்துள்ள இக்குழுவின் புதிய முயற்சியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை பாராட்டியுள்ளனர். 1.9 மில்லியன் பார்வைகளைத் தாண்டிய இந்த வீடியோ, கற்பனை மற்றும் தொழில்நுட்பத்தின் இசைவான கலவையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Gokul S Pillai (@gokulspillaii)