சென்னை கோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞரான யுவராஜ் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு அருகே உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் தன்னுடைய குழந்தைக்கும் அவரது உறவினர் குழந்தைகளுக்கும் டோனட் கேக்குகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தைகளை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பிறகு வீட்டில் மீதம் இருந்த டோனட் கேக்குகளை பெற்றோர்கள் சோதித்த போது கேக்குகள் பூசணம் அடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு குழந்தையின் பெற்றோர் சென்று கேட்டபோது கடையில் இருந்த ஊழியர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பேக்கரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீதம் இருந்த டோனட் கேக்குகளை குப்பையில் வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கடையின் உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.