கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் ஹெஸ்பெலின்‌ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு திருமணமாகி கிரைசனி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் குழந்தையைப் பற்றி கிரைசனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தான் பெற்ற குழந்தைதான் என்று கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது  தன்னுடைய தோழி ஒருவர் ஆண் நண்பர் மூலம் தகாத முறையில் குழந்தை பெற்றதாகவும் அந்த குழந்தை சில காலம் தன்னிடம் வைத்திருக்குமாறு கூறியதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட காவல்துறையினர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிரைசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.