தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை வரத்து குறைவினால் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவைகளை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விலையை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில் ‌ சென்னையில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய் வரையிலும், வெங்காயம் கிலோ 40 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விலையை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பசுமை பண்ணை கடைகள் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.