மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சிவா – பொன்மணி தம்பதியினர் வசித்து வந்தனர். சிவா நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவா தினமும் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்மணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த பொன்மணியின் பெற்றோர் தனது மகளின் ஐந்து வயது மகனை தங்களது பராமரிப்பில் வளர்க்க அழைத்துச் சென்றனர். ஒரு சில மாதங்களிலேயே சிவா ரஞ்சிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தனது மாமனார் மாமியார் பராமரிப்பில் இருந்த மகனையும் சண்டை போட்டு தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரஞ்சிதாவுடன் சிவா ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதை பார்த்த பொன்மணியின் சகோதரர் அர்ஜுன் எனது தங்கை பலியான துக்கம் இல்லை. குழந்தையும் அழைத்துச் சென்றாய். இப்போது மனைவியுடன் கொண்டாட்டமாக பயணம் செய்கிறாயா என்று கேட்டு கோபப்பட்டார். மேலும் மனைவியுடன் வீட்டிற்கு சென்ற சிவாவை நடுவழியிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அர்ஜுன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அர்ஜுனை தேடி வருகின்றனர்.