
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜனனி. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பிற்குச் சென்ற புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது சிவப்பு நிற சேலை அணிந்து தங்க நகைகள் போட்டு எடுத்துக் கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்து ரசிகர்கள் தங்க தேர் போல இருக்கீங்க ஜனனி என கருத்துக்களை கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க