
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது. இதில் சரவணன் என்பவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதாகவும், சில முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவரை விசாரணை செய்கையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கங்களை வாங்கி வைத்துக்கொண்டு சுங்க சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் சென்று கடத்தல்காரர்களிடம் கொடுத்து விடுவது தெரியவந்தது. மேலும் இது பற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தலுக்கு இவர் உதவி செய்துள்ளார். மேலும் அவர் யாருக்கெல்லாம் உதவி செய்தார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.