
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது எருமை மாட்டிற்கு 10 கிலோ தங்க சங்கிலியை ஒருவர் அணிவிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் நகை பெட்டியினை கையில் வைத்துள்ளார்.அருகில் இருந்த வாலிபர் அந்த பெட்டியில் இருந்து தங்க சங்கிலியை எடுத்தார்.அதன் மதிப்பு சுமார் 10 கிலோவாகும். அதன் பிறகு அந்த முதியவர் தங்கச் சங்கலியை எடுத்து அந்த மாட்டிற்கு அணிவித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram