
தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஜைரா வாசிம். இவர்சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை ஜாஹித் வாசிம் நேற்று காலமானார். இதை ஜைரா வாசிம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இதனையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜைரா தற்போது ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.