தமிழகம் மின்சாரம் வாரியத்தின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் நாளை அதாவது சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ஒரத்தநாடு டவுன், எலந்தவெட்டி, வளத்தான் தெரு, தெலுங்கன் குடிக்காடு, பேய்கரும்பன்கோட்டை, புதூர், வெட்டிக்காடு, கருக்காடிப்பட்டி, பாச்சூர், கக்கரை, தெக்கூர், புலவன்காடு, பாளம்புத்தூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேலும் நாளை  காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.