தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏழுபட்டி நடு தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014-ஆம் ஆண்டு உதயா என்பவரையும் நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இன்று குறுந்தையன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவரை பின்தொடர்ந்து வந்த ஒத்தக்கை ராஜா என்பவர் குறுந்தையன் மீது காரை மோதியுள்ளார். இதனால் குறுந்தையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அதன் பிறகு ஒத்தக்கை ராஜா உள்ளிட்ட இரண்டு பேர் குறுந்தையனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குறுந்தையனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உலகநாதன், உதயா ஆகியோரின் கொலைக்கு பழிக்கு பழியாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.