
தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை பெரிய கோவில் சோழர்களின் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் தற்போது புதிய அறிவிப்பு பலகை ஒன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ள ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆண்கள் வேட்டி, பேண்ட் மற்றும் சட்டை அணிந்தும் பெண்கள் புடவை, தாவணி மற்றும் துப்பட்டா உடன் கூடிய சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே கோவிலுக்குள் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் இதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.