
விருதுநகர் மாவட்டம் நாச்சியார் புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் பார்த்தசாரதி. இவர் JEE நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து மெட்ராஸ் ஐஐடியில் அரசு பொறியியல் B.TECH AEROSPACE பாடப்பிரிவில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இது குறித்து அவருடைய தந்தை சந்திர போஸ் கூறுகையில், என் மகனின் படிப்புக்கு வறுமை ஒரு தடையாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து படிக்க வைத்துள்ளேன் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்..