சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது ஒரு வயதான முதியவரை இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதை பதைக்க  வைக்கிறது. அதாவது வீரப்பன் என்ற வயதான முதியவர் தன்னுடைய மனைவியை பார்க்க சென்றார். அப்போது அவருடைய மகள் மீது பந்து பட்டுள்ளது. இதனை அவர் தட்டி கேட்டு நிலையில் அங்கிருந்த ஒரு பெண் அவரை அடித்து தாக்கியதோடு மற்றொரு பெண் கிரிக்கெட் பேட்டால் அடிக்கிறார்.

 

அந்த முதியவர் அவர்களை தடுக்க முயற்சிக்கும் நிலையில் ஜெகன் என்ற வாலிபர் குத்துச்சண்டையில் அடிப்பது போன்று அந்த முதியவரை சரமாரியாக அடித்து தாக்குகிறார். இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.மே லும் இந்த வீடியோ பிரபல மாலை முரசு தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் வயதான முதியவரை தாக்கிய அந்த பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.