
இன்றைய சமூக ஊடக உலகில், இன்ப்ளூயன்சர்கள் தங்களை மையமாக்கிக் காட்டிக்கொள்ளும் நோக்கில் பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். டெல்லியைச் சேர்ந்த ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் பிகு சிங், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரயில்வே பாதையில் ஓடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
“Running with train” என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பிகு சிங் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, மிகுந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் ஒன்று பக்கமாக செல்கிறது. இந்த ஆபத்தான முயற்சி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோ வைரலான பிறகு, பலரும் பிகு சிங்கின் ஃபிட்னஸ் திறமையை பாராட்டினாலும், பலர் இந்த செயலை விமர்சித்தனர். “ஒரே ஒரு தவறான அடி போதுமே… உயிரோடவே முடிந்துவிடும்”, “வீடியோக்களுக்கு வியூஸ் தேவை என்பதற்காக உயிரை போராட வைக்க வேண்டாம்” என பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னொரு நபர், “இந்த வீடியோவால் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்? ரயிலுடன் ஓடுவது எப்படி ஊக்கத்துக்கு உதவுமாம்?” என கேள்வி எழுப்பினார்.