
கேரள மாநிலத்தில் பயணிகள் ரயில் ஒன்று நிலம்பூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வல்லபுளா ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் மாடு ஒன்றை நின்று கொண்டிருந்த நிலையில் அந்த மாட்டின் மீது பயணிகள் ரயில் மோதி இன்ஜின் தடம் புரண்டுள்ளது.
இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி விட்டதால் பயணிகள் காயம் இன்றி தப்பித்தனர். இந்த விபத்தினால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து சிறிது நேரம் காலதாமதம் ஆனது.