
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுகிறது. அதன்படி வெறும் பப்கார்ன் மட்டும் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டால் அதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும், பாக்கெட்டில் வைத்து பெயர் பொறிக்கப்பட்டால் 12 முதல் 18 சதவீதம் வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள துணிகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் இதனை 12 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 20 லிட்டர் தண்ணீர் கேனுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் அதனை 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஆர்டர் செய்து வாங்கப்படும் சர்வீஸ் சார்ஜ் மீதான வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் 15000 ரூபாய்க்கு மேல் உள்ள ஷுக்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில் அதனை 28 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.