
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி புஷ்பா மற்றும் 9 மற்றும் 3 வயது பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் 9 வயது குழந்தையை கழுத்தை நெரித்து வீட்டில் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு உள்ளார். அதன் பிறகு தாயும் மூன்று வயது குழந்தையும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தங்கராஜை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.