உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீம், இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோடு மாவட்ட மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பீமனின் மனைவி துணி துவைப்பதற்காக பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருடைய ஒன்பது மாத பெண் குழந்தை தவழ்ந்து சென்று பாக்கெட்டுக்குள் தவறி விழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடிவந்த குழந்தையின் தாய் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.