உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் வாழும் 62 வயதான ஹரிஷ் குமார் ஷுக்லா என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனிமையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவரது அருகில் வாடகைக்கு இருந்த 45 வயதான பூஜா என்ற பெண்ணுடன் பழகி வந்தார். சில மாதங்களில் அந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, பெனஜாபர் பகுதியில் உள்ள ஆர்யா சமாஜ் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பூஜாவுக்காக ஹரிஷ் லட்சக்கணக்கான பரிசுகள், ஆடைகள், நகைகள் வாங்கி கொடுத்தார்.

ஆனால் திருமணமான 2-வது நாளில் பூஜா வீட்டிலிருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை களவாடி வீட்டை விட்டு பறந்து விட்டார். திடீரென புது மனைவியின் காணாமல் போனதையடுத்து ஹரிஷ் பல வாரங்கள் தேடியும் எட்டிய முடிவே இல்லாததால், இறுதியில் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தெரிந்த பிறகு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பூஜாவை பிடிக்க விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.