
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு மாணவி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த மாணவி அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் மோகன் என்பவர் மாணவியை தனது அறைக்கு தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மோகனை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்