தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி (செவ்வாய்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னை – குமரி ஏசி பஸ் ரூ.2000 சாதாரண பஸ் ரூ.1400, சென்னை – தேனி ஏசி பஸ் ரூ.1650 சாதாரண பஸ் ரூ.950, சென்னை – நெல்லை ஏசி பஸ் ரூ.2450 சாதாரண பஸ் ரூ.1400, சென்னை – மதுரை ஏசி பஸ் ரூ.1,900 சாதாரண பஸ் ரூ.900 வரை என டிக்கெட் விற்பனை உள்ளது.