தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் நடராஜபுரம் வடக்கு இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த இளையராஜா என்பவருடைய மூத்த மகள் சாய் வெண்பா (4). இவர் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளிக்கு வேனில் சென்று வரும் சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பள்ளியிலிருந்து வேனில் வந்து இறங்கியுள்ளார்.

மீண்டும் வேன் புறப்பட்டபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சாய் வெண்பாவின் தங்கை தியாலினி (2) மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.