நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி என மூன்று பேர் இதுவரை உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மதிவேந்தனும் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அமைச்சர் அவர்கள் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.