தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏனெனில் மாஸ்டர் படத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சங்கீதா விஜயுடன் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் த்ரிஷா மற்றும் விஜய் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக கோவாவுக்கு தனி விமானத்தில் சென்ற வீடியோ வெளியாகியது. இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜயுடன் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அவர் விமான நிலையத்தில் ஒரு தனியார் விமானத்தில் சென்ற நிலையில் விமான நிலையத்திற்குள் சென்று அந்த போட்டோவை எடுத்தது யார்.? இது தொடர்பாக நாங்கள் மத்திய விமானத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். இப்படி விமான நிலையத்திற்குள் சென்று போட்டோ எடுத்து ஒரு தனிநபரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது முறையா.? திமுக ஐடி விங் இப்படி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

விஜய் பாஜகவுக்கு எதிராக பேசினாலும் அவருடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதை எந்த விதத்தில் முறையாகும். பாஜக கட்சியின் மாநில தலைவராக நான் சொல்கிறேன் இதுதான் நீங்கள் காட்டக்கூடிய அரசியல் நாகரிகம். இதுதான் திமுக மக்களை மதிக்கக் கூடிய விதம். யார் வேண்டுமானாலும் எங்கு  வேண்டுமானாலும் போவாங்க. அவங்க தனியா கல்யாணத்துக்கு போனது கூட நீங்க போட்டோ எடுத்து லீக் பண்ணுவீங்களா. அதோடு அந்த விமானத்தில் சென்ற பயணிகளின் லிஸ்ட்டை கூட நீங்க எடுத்து போட்டோ எடுத்து அனுப்பி உள்ளீர்கள். நாங்கள் விமானத்துறை போக்குவரத்து அமைச்சகத்திடம் கேட்கிறோம். சிசிடிவி கேமராவை பார்த்து யார் போட்டோ ‌ எடுத்தார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள்‌மீது எஃப்ஐஆர் போடுங்க.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இருக்கும் அவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கி விட்டதால் இனி சினிமாவில் நடித்தாலும் அரசியலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர் அரசியலில் பிஸியாக இருந்ததால் பத்து வருட மோடியை ஐயாவின் ஆட்சியை அவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம். 10 வருடங்களாக பாஜகவின் ஆட்சி அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டது என்றால் கரெக்டாக அதற்கான பாயிண்டை கூற வேண்டும் என்றார். மேலும் இணையதளங்களில் ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா என்ற ஹேஷ்டேக் வைரலாகி வரும் நிலையில் திரிஷா  மற்றும் விஜய் உறவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை அதற்கான வதந்திகளுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. இந்த நிலையில் விஜய் மற்றும் திரிஷா விவகாரம் குறித்து அண்ணாமலை கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.