திரை உலகின் பிரபல நடிகையான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை netflix நிறுவனம் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியுடன் சேர்த்து தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்று இருந்த காட்சிகளும் இருந்தது.

இதனால் தனக்கு பத்து கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நடிகை நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்து பதில் அனுப்பி இருந்தார். இதை அடுத்து தனுஷ் உயர் நீதிமன்றத்தில் netflix நிறுவனம், நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

படத்தில் நயன்தாராவின் நடிப்பும் குரலும் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில் netflix நிறுவனம் அந்த வீடியோவை நயன்தாராவின் திருமண வீடியோவுடன் சேர்த்து வெளியிட்டுள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தனுஷின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று netflix நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஹைகோர்ட்டில் இந்த வழக்கை தொடர முடியாது என்பதால் netflix நிறுவனத்தின் மனுவை ஹைகோர்ட் நிராகரித்துவிட்டது.