
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 53 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 82 கோடி 57 முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்துள்ளார்.
அதன் பிறகு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல. 60 ஆண்டுகளாக மக்களின் தேவையை அறிந்து தீர்த்து வைக்கிறேன். தன்மானம் உள்ள தமிழர்கள் இபிஎஸ் ஆட்சி எப்போது முடியும் என காத்திருந்தனர் என நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.